Saturday, January 2, 2021

பாவாத் பாவம்


ஒன்றாம் பாவம்: லக்னம்

ஒரு ஜாதகத்தில் முதல் பாவம் லக்னம். ஒன்றிற்கு உரியவர் ஒன்றிலேயே இருப்பதும், இரண்டுக்கு உரியவர் மறு இரண்டில் இருப்பதும், மூன்றிற்கு உரியவர் மறு மூன்றில் இருப்பதும், இப்படியே போய் ,12 க்கு உரியவர் மறு பன்னிரண்டில் இருப்பதும் தான் பாவாத்பாவம். இது உச்ச பலனுக்குச் சமம். குஜாதி ஐவர்கள் லக்னாதிபதிகளாக வந்து ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம், கேந்திரம் என்ற நிலைகளை அடைந்தால் அவர்களுக்குப் பஞ்ச மஹா புருஷ யோகம் ஏற்படும். முறையே சனியால் சசம், செவ்வாயால் ருசகம், புதனால் பத்ரம், குருவால் ஹம்ஸம், சுக்கிரனால் மாளவ்யம் உண்டாகும். பெயருக்கு ஏற்ற யோக பலன்கள். கடக, சிம்மங்களுக்கு செவ்வாயால் ராஜ யோகம் உண்டாகும். சிம்மமே மேலானது. கடகம் ஒரு படி கீழானது. ஏனெனில் செவ்வாய்க்கு கடகம் நீச வீடு.

இப்போது பாவாத் பாவம் பற்றிப் பார்ப்போம்.


முதலில் மேஷத்திலிருந்து ஆரம்பிக்கலாம்:


மேஷ லக்னத்தில் செவ்வாய் ஆட்சி. பஞ்ச மஹா புருஷ யோகம் வேறு. ருஷகம். 4ம் பார்வையால் கடகத்தைப் பார்க்கிறார். அந்த இடத்தின் ஆதி பத்திய விஷேஷங்கள் சிறக்கும். சந்திரனும் அங்கே இருந்தால் அவரின் காரகத்துவம் மேலோங்கும். மேலும் சந்திர கேந்திரத்தில், செவ்வாய் இருப்பதால் அவரின் பலமும் கூடும். கடகத்தைப் பார்ப்பதால் கல்வியில் பாண்டித்தியம் உண்டாகும். ஏனெனில் முருகன் ஞான பண்டிதன். செவ்வாயின் அதி தேவதை சுப்பிரமணியர். வீடு, மனை, வாகனம், நல்ல நண்பர்கள், சுப பந்துக்கள் அமையும். கடகத்தில் சந்திரன் இருந்தால் அது "காரகோ பாவ நாஸ்தி". மாத்ரு காரகன் மாத்ரு ஸ்தானத்தில் அமரக்கூடாது. பாவம் நசிக்கும். ஆயினும் யோக பலமுள்ள செவ்வாய் பார்ப்பதால் ஆபத்து இல்லை. செவ்வாயால் திடமான சரீரமும்,சந்திரனால் முக வசீகரமும் ஜாதகருக்கு அமையும்.

ஒரு வேளை சந்திரன் விருச்சிகத்தில் நீசம் பெற்றிருந்தாலும் செவ்வாய் ஆட்சி பெறுவதால் நீசம் பங்கமாகி சந்திரனுக்கு நீசபங்க ராஜ யோகம் உண்டாகும். தாய்க்கும் நலம். தாயாராலும் நலம். காரணம் சந்திரன் கடகத்திற்கு 5ல், கோணத்தில், யோகத்தில். செவ்வாய் துலாத்தைப் பார்க்கிறார். அது 7ம் வீடு. திருமணம், கூட்டுத் தொழில், மாரகம் இவைகளைச்சொல்லும். சுக்கிரன் இரட்டை மாரகன். மாரகன் தன் ஸ்தானத்தில், 7 ல். மாரகம் குறைவு படும். களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில்"காரகோ பாவ நாஸ்தி". பாவம் நசித்து விடும். கூட்டுத்தொழில் தொல்லை தரும். சித்திரை சாரத்தில் இருந்தால் நசிவு குறையும். சுக்கிரனாலும் செவ்வாய்க்கும் பலம் குறையும். கேது, சூரிய சாரங்கள் நலம் பயக்கும், செவ்வாய் தன் 8ம் பார்வையால் விருச்சிகத்தைப் பார்க்கிறார்.அதுவும் அவர் ஆட்சி வீடு. அஷ்டமாதிபதி ஆட்சி, யோகம் கொண்டு தன் வீட்டைத் தானே பார்க்கிறார். அஷ்டமாதிபதிபத்திய தோஷம் பெருமளவில் குறையும். அவர் ஆயுள் ஸ்தானாதிபதியும் கூட. ஆயுள் தீர்க்கம். அஷ்டமாதி பதியின் ஒரு சிறப்பை வேறு ஒரு இடத்தில் சொல்வேன்.


அன்புடன் அளித்தவர் சக்தி ஸ்ரீ

MA (Astro);B.E;

No comments:

Post a Comment

ஒன்பது கிரக சம்பந்தமும், கிரக அஸ்தாங்கதமும், கிரக யுத்தமும், கொரோனாவும்.

  2019 - மார்ச்7-5 மணி 52 நிமிடம். சனி தனுசில் இருந்தபோது ‌‍‍‍‍‍ ‌கேதுப் பிரவேசம்.‌ தனுசில் இரு கிரகங்கள். சனி கேதுவின் பிடியில் வந்தார்.  ...