Friday, January 1, 2021

கிரகங்களின் உச்ச பலன்களும் விசித்திரங்களும்!

கிரகங்கள் தம் உச்ச ராசியில் அதிக பட்ச சுப பலன்களைத் தருகின்றன என்பது பொது. அதி உச்சம் தாண்டினால் உச்ச பலன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:


முதலில் சூரியன்:

மேஷத்தில் உச்சம்.10*யில் அதி உச்சம். பலனை எதிர் பார்ப்பவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. ஏனெனில் மேஷத்தின் முதல் திரேக்காணம் விஷத் திரேக்காணம் அது 10*வரை. ஆனால் மேஷத்திற்கு முந்தைய ராசியான மீனத்தில் சூரியன் இருக்கும் போது உச்சாபிலாஷா என்ற நிலை ஏற்படும். பொதுவாக முக்கால் வாசி உச்ச பலனை மீனத்திலேயே தந்து விடுவார். இப்படி எல்லா கிரகங்களுக்கும் உச்சாபிலாஷா ஏற்படும். மீனத்தில் பூரட்டாதி 4ம் பாதமும், ரேவதியின் 4 பாதங்களும் உகந்தவை. பலன்களும் குருவையும் புதனையும் சார்ந்தே இருக்கும்.

இனி சந்திரன்:

அவர் ரிஷபத்தில் 3*யில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி மேஷத்தில் வரும் போது பலன்.அஸ்வினி, பரணியைத் தவிர்த்தால் கார்த்திகை 1ல் முக்கால் வாசியும் கார்த்திகை 2ல் கால் வாசியும் பலன் கிடைக்கும். அதுவும் சூரியனைச் சார்ந்து.

அடுத்தது குரு:

கடகத்தில் 5*யில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி மிதுனத்தில் செவ்வாய், ராகு, குரு சாரம் நன்றாக இருக்கும். அதிலும் ராகு சாரம் விஷேசம். ஏனெனில் ராகு, குரு சேர்க்கை குரு சண்டாள யோகம் தரும். குருவின் சுப பலன்கள் ராகுவால் வழங்கப்படும். முக்கால் வாசிப் பலன்கள் மிதுனத்திலும், கால்வாசிப் பலன்கள் புனர்பூசம் 4ம் பாதத்திலும் கிடைத்துவிடும்.

அடுத்ததாக புதன்:

புதன் கன்னியில் 15*யில் அதி  உ ச்சம். சிம்மத்தில் கேது,சுக்ர, சூரிய சாரங்கள். சுக்ர சாரம் அதி மித்ர சாரம்.மிளிரும்.சூரிய சாரமும் நட்பே. ஆனால் கேது சாரம் வித்தியாசமானது. புதன் வித்யா காரகன். கேது ஞான காரகன். வித்யை முதிர்ந்தால் ஞானம். ஞானம் முதிர்ந்தால் மோனம்.மோனம் என்பது ஞான வரம்பு. விநாயகர் மோனப்பொருள். புதனும் கேதுவும் வித்யா விஷயத்தில் ஒன்று. புதன் மகத்திலிருந்து வெளியேறும் போது ஞானக் கடலில் தோய்ந்து வெளி வருவார். இது வருடா வருடம் கூடும். ஆனால் அதற்கு கேது 3, 6, 10, 11ல் இருந்தாக வேண்டும். விருச்சிகமும் சரியே. முக்கால் வாசிப் பலன்கள் சிம்மத்திலும் கால் வாசிப் பலன்கள் கன்னியின் 2ம் திரேக்காணத்திலும் நடந்து விடும். ஏனெனில் முதல் திரேக்காணம் விஷத் திரேக்காணம்.

அடுத்தது சனி:

சனி துலாத்தில் 20* யில் அதி  உச்சம். உச்சாபிலாஷாவின்படி கன்னியில் சூரிய, சந்திர, செவ்வாய் சாரங்கள் அனைத்தும் பகையே. துலாத்தின் இரண்டாம் திரேக்காணம் விஷத் திரேக்காணம். அது ராகு சாரம். ராகுவால் சில கெடுதலான நன்மைகள் உண்டு. அதாவது ஒருவர் தன் காசில் நண்பருக்குச் சாராயம்  வாங்கிக் கொடுப்பது போல. மொத்தத்தில் சனி உச்சத்தால் எந்த லாபமும் இல்லை.

அடுத்தது செவ்வாய்:

செவ்வாய்க்கு 28*யில் மகரத்தில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி மூலம் கேது சாரம். கேது, செவ்வாய் போல பலன். பூராடம் சுக்ர சாரம். சுக்ரன் சம உறவுடையவன். உத்திராடம் சூரிய சாரம். அதி மித்ர சாரம். மகரத்தில் செவ்வாய் உச்சம், வக்ரம், ஸ்தம்பனம் என்ற மூன்று நிலைகளில் எட்டு மாதங்கள் வரை இருந்திருக்கிறது. உச்சத்தில் சுப பலன்.வக்ரத்தில் செவ்வாய் ராஜா போல இருப்பார். ஸ்தம்பனத் திலும் (ஆடாமல், அசையாமல்) சில நாட்கள் தன் சுப பலத்தைத் தக்க வைத்துக் கொள்வார். தன் சுய சாரத்தில் அதி உச்சம் பெறும் ஒரே கிரகம் செவ்வாய் தான். செவ்வாய் உச்சம், அதி உச்சம் பெற்ற ஜாதகர்கள் உன்னத நிலையை அடைந்ததைப் பார்த்திருக்கிறேன்.

அடுத்தது சுக்ரன்:

 சுக்ரன் மீனத்தில் 27*யில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி செவ்வாய், ராகு சாரங்கள் வீண் போகாது. குரு சாரம் சுமார். மீனத்தின் கால் வாசிப் பலன்களில் கொஞ்சம் சனி புத சாரத்தால் வீணாகி விடும். ஏனெனில் மீனத்தின் 2ம் திரேக்காணம் விஷத் திரேக்காணம்.

கடைசியாக ராகு & கேது:

ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் உச்சம். இதில் மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதி உச்சமென்பதும் இல்லை. உச்சாபிலாஷாவும் இல்லை. பொதுவாக ராகு சனியைப் போலவும் கேது செவ்வாயைப் போலவும் பலன்கள் தரும். எப்போதும் வக்ரம். அதீத பலம். தான் நின்ற ராசி  நாதன் போலவும், தன்னுடன் சேர்ந்தவர் போலவும், தன்னைப் பார்த்தவர் போலவும், தான் நின்ற சார நாதன் போலவும், பலன்கள் தருவர். தன் உச்ச ராசியில் தான் நின்றாலும் மற்ற எவர் நின்றாலும் சாரத்திற்கு ஏற்பவே பலன்.

பொதுவாக:

அதி உச்ச பாகையில் கிரகங்கள் பலன்கள் ஒன்றும் தராது. அதன் முந்தைய பாகை வரை தான் அதி உச்ச பலன். உச்ச பலன் நன்கு பெறுவதற்கு உச்ச கிரகங்களின் சார நாதர்கள் நல்ல இடங்களில் பலத்துடன் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் சம உறவிலாவது அமைய வேண்டும். அனைத்தும் தேர்ந்து தெளிக.! 

அன்புடன் அளித்தவர் சக்தி ஸ்ரீ

 MA (Astro);B.E;

இனி மேல்: பாவாத் பாவம்.

No comments:

Post a Comment

ஒன்பது கிரக சம்பந்தமும், கிரக அஸ்தாங்கதமும், கிரக யுத்தமும், கொரோனாவும்.

  2019 - மார்ச்7-5 மணி 52 நிமிடம். சனி தனுசில் இருந்தபோது ‌‍‍‍‍‍ ‌கேதுப் பிரவேசம்.‌ தனுசில் இரு கிரகங்கள். சனி கேதுவின் பிடியில் வந்தார்.  ...